உலகம்

‌குல்பூஷண் ஜாதவை சந்தித்த தாய், மனைவி

‌குல்பூஷண் ஜாதவை சந்தித்த தாய், மனைவி

webteam

பாகிஸ்தான் உளவு பார்த்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியாவி‌ன் முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். 

இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து குல்பூஷண் ஜாதவை அவரது தாயும், மனைவியும் சந்தித்தனர். அப்போது இந்திய தூதரக அதிகாரியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு காரணமாக இஸ்லாம‌பாத் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை வழங்கவும்,‌ அவரைச் சந்திக்கவும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. சர்வதேச நீதிமன்றத்திடம் இந்தியா முறையிட்டதன் கார‌ணமாக தற்போது இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து குல்பூஷண் ஜாதாவை மீட்க இந்தியத் தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.