உலகம்

பாக். தளபதியிடம் குல்பூஷன் ஜாதவ் கருணை மனு

பாக். தளபதியிடம் குல்பூஷன் ஜாதவ் கருணை மனு

webteam

பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்றிருக்கும் இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது கருணை மனுவில் பாகிஸ்தானில் உளவு, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஜாதவ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்ட நிலையில் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.