உலகம்

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

webteam

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாகவும் கூறி, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா சார்பில் நெதர்லாந்து நாட்டின் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த 10 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாதவை, பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனால் அவரது தூக்கு தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று தொடங்கி 21 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தியா சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே வாதாடுகிறார்.