உலகம்

குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை நிராகரித்தது பாக். நீதிமன்றம்

குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை நிராகரித்தது பாக். நீதிமன்றம்

webteam

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்புஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், எதிர்ப்பை மீறி ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்போவதாக பாகிஸ்தான அறிவித்தது.

இந்த நிலையில், குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜாதவின் கருணை மனுவை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது. குல்பூஷன் ஜாதவின் கருணை மனு மீது பாகிஸ்தான் ராணுவ தளபதி முடிவெடுப்பார் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உளவுபார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.