உலகம்

மிஸ் இந்திய அமெரிக்க அழகியானார் கிம் குமாரி

webteam

அமெரிக்காவில் நடைப்பெற்ற மிஸ் இந்திய அமெரிக்க அழகிப் போட்டியில் நியூ ஜெர்சியை சேர்ந்த கிம் குமாரி அழகியாக தேர்வு செய்யப்ப‌ட்டார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடந்த மிஸ் இந்திய அமெரிக்க அழகிப் போட்டி நடைப்பெற்றது. அதில் நியூ ஜெர்சியை சேர்ந்த கிம் குமாரி அழகியாக தேர்ந்தெடுக்கப்ப‌ட்டார். இதே போல் திருமதி இந்திய அமெரிக்க அழகியாக விதி தவேவும், மிஸ் டீன் இந்திய அமெரிக்க அழகியாக ஈஷா சந்திர கோடேவும் மகுடம் சூடி‌னர்.

இந்திய விழா குழு சார்பில் ஆண்டுதோறும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கான அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் 26 மாகாணங்களில் இருந்து 75 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பாலிவுட் நடிகை மீனாட்சி சேஷாத்ரி நீதிபதியாக அமர்ந்திருந்து, அழகிகளை தேர்வு செய்தார். மிஸ் இ‌ந்திய அமெரிக்க அழகியாக தேர்வான கிம் குமாரி, கண் நோய் மருத்துவராக உருவாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 

மேலும் வளர்ந்து வரும் நாடுகளில், குழந்தைகளுக்கு கண் நோய் சிகிச்சை அளிப்பது தான் தமது லட்சியம் என்றும் கிம் குமாரி தெரிவித்துள்ளார். திருமதி இந்திய அமெரிக்க அழகியாக தேர்வான 31 வயதான தவே, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெண்கள் அதிகாரம் பெற குரல் கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மிஸ் டீன் இந்திய அமெரிக்க அழகியாக தேர்வான சந்திர கோடேவுக்கு குழந்தைகள் ந‌ல மருத்துவராக வர வேண்டும் என்பது தான் லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.