உலகம்

என்னா ஒரு புத்திசாலித்தனம்..! தடைகளை தாண்டி கிச்சனில் நுழையும் வாண்டு பேபி: க்யூட் வீடியோ

என்னா ஒரு புத்திசாலித்தனம்..! தடைகளை தாண்டி கிச்சனில் நுழையும் வாண்டு பேபி: க்யூட் வீடியோ

EllusamyKarthik

அழகு குட்டிச் செல்லங்களான சுட்டிக் குழந்தைகளின் உலகம் லூட்டியானது. குறும்புகளுக்கும், சேட்டைகளும் பஞ்சம் இல்லாத பருவம் குழந்தை பருவம் தான். 

இன்றைய டிஜிட்டல் உலகில் வாண்டு பேபிகள் பலரது சேட்டைகளும், லூட்டிகளும் வைரலாக பகிரப்படுவதுண்டு. 

தற்போது தனக்கு பிடித்த ஸ்நாக்ஸை கதவடைக்க பட்டிருந்த சமயலறைக்குள் சென்று களவாடிய வாண்டு பேபி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

‘என் குழந்தை சமயலறைக்குள் நுழையாத படி சிறிய கதவினால் தடையிட்டிருந்தேன். ஆனால் எனது முயற்சி தோல்வியடைந்தது’ என தனது குழந்தை சமையலறைக்கு சென்று ஸ்நாக்ஸை எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அக்குழந்தையின் தாய். 

அந்த வீடியோவில் ஒரு குழந்தை ஸ்நாக்ஸை எடுக்க மேற்கொண்ட முயற்சியில் தனக்கு தடையாக இருந்த சிறிய அலுமினிய கதவை லாவகமாக நிமிர்த்தி சமயலறைக்குள் நுழைகிறது. பின்னர் அங்குள்ள டிராவில் வைக்கப்பட்டுள்ள ஸ்நாக்ஸை எடுத்துக் கொண்டு மீண்டும் அதே போல கதவை நிமிர்த்தி வெளியேறுகிறது. 

இணைய வாசிகளான நெட்டிசன்களால் பரவலாக கொண்டாடப்பட்டு வரும் இந்த வீடியோ ஆயிரக் கணக்கிலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.