உலகம்

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்திய வம்சாவளிப் பெண்

Veeramani

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் பிறந்தவர் சாந்தி சேதி. இவரது தாய் கனடாவைச் சேர்ந்தவர். தந்தை இந்தியாவிலிருந்து 1960-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். சாந்தி சேதி, அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றினார். இந்தியா வந்த அமெரிக்க போர் கப்பலின் முதல் பெண் கமாண்டரும் இவர்தான்.



இந்நிலையில், சாந்தி சேதி, தற்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் செயலாளராகவும், பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸிக்கு பாதுகாப்பு தொடர்பான புதுமையான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் சாந்தி சேதி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க:"உலகில் ஐந்தில் ஒருவர் பட்டினியில் வீழும் அபாயம்" - ஐநா கவலை