உலகம்

"ஜூலியன் அசாஞ்சே சிறையிலேயே இறந்துவிடக்கூடும்"- மருத்துவர்கள் எச்சரிக்கை

"ஜூலியன் அசாஞ்சே சிறையிலேயே இறந்துவிடக்கூடும்"- மருத்துவர்கள் எச்சரிக்கை

jagadeesh

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டன் சிறையிலேயே உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக பிரிட்டன் அரசுக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ ரகசியங்களையும் ஊழல்களையும் இணையதளங்களில் அம்பலப்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா தொடர்ந்த வழக்கில் அசாஞ்சேவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் காவல்துறையினர் அசாஞ்சேவை கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். அங்கு அவரது உடல் நிலையும் மனநிலையும் பெரிதும் பாதிக்க‌ப்பட்டுள்ள‌தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அசாஞ்சே சிறையிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் என்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரிட்டன் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். ஆகவே அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.