உலகம்

”4 நாளுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார்!” - ஐ.நாவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Abinaya

கென்யாவில் பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீப் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருந்தது. ஷெரீப் போல் பணியிலிருக்கும் போது கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1993 வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 2 ஐக்கிய நாடுகள் சபை, ‘பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனையிலிருந்து விலக்குவதற்கான சர்வதேச தினம்’மாக அறிவித்ததுள்ளது. 

இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த 1993ம் ஆண்டு முதல் தற்போது வரை உலகம் முழுவதும் 1,564 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சராசரியாக ஒவ்வொரு நான்கு நாளுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகின்றனர். மூன்று நாளுக்கு இரண்டு பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் 11% பெண் பத்திரிக்கையாளர்கள்.

கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டுக்கு இடையில் மட்டும் 956 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதே காலகட்டத்தில் 2,653 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈராக், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக கூறப்பட்டுள்ளது. 1993 முதல் இந்த ஆண்டு வரை அதிக பட்சமாக இராக்கில் 201 பத்திரிக்கையாளர்களும், மெக்ஸிகோவில் 150 பத்திரிக்கையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குறைவாக கொலம்பியாவில் 51 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியாவில், கடந்த 1993ம் ஆண்டு முதல் இந்த மாதம் வரை 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12 பேரும், பீகாரில் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். யுனெஸ்கோவின் தகவலின் படி, உகலம் முழுவதும் 2006 முதல் 13 சதவீத பத்திரிகையாளர்களின் கொலை வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. மேலும், கொல்லப்படும் பெண் பத்திரிகையாளர்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.