உலகம்

மிரட்டும் ஜோஸ் புயல்: ராட்சத அலைகள் எழுவதால் மீனவர்கள் அச்சம்

மிரட்டும் ஜோஸ் புயல்: ராட்சத அலைகள் எழுவதால் மீனவர்கள் அச்சம்

webteam

அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள ஜோஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

நியூஜெர்சி, எமரால்டு ஐசல், வடக்கு கரோலினா போன்ற கடல் பகுதிகளில் பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் கடலில் குளிக்கவும், சர்ஃபிங் செய்யவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோ‌ஸ் புயல் காரணமாக மஸாசூசெட்ஸ் பகுதியில் கனமழையுடன் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது இந்த புயல் அட்லாண்டிக் நோக்கி மெல்ல நகர்ந்து வருவதாகவு‌ம் கரையை கடப்பதற்கு முன் நியூ இங்கிலாந்து பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.