உலகம்

ட்ரம்ப் இன்னும் வளர வேண்டும்: அமெ. துணை அதிபர் கிண்டல்

ட்ரம்ப் இன்னும் வளர வேண்டும்: அமெ. துணை அதிபர் கிண்டல்

webteam

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்னும் வளர வேண்டும் என்று துணை அதிபர் ஜோ பிடன் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உளவுப் பிரிவுகளை விமர்சிப்பது குறித்தும் ட்ரம்புக்கு ஜோ பிடன் கண்டனம் தெரிவித்தார். நாட்டின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டவர், உளவு அமைப்புகள் மீது நம்பிக்கையில்லாமல் இருப்பது, மூளையற்றவர்களின் செயலைப் போன்று இருப்பதாக ஜோ பிடன் குறிப்பிட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜோ பிடன், ட்ரம்பின் நிலைப்பாடுகள் குறித்து கடுமையாகச் சாடினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உளவுத்துறையிடம் இருப்பதாகவும் பிடன் கூறினார்.

ஹிலரி கிளின்டனின் பரப்புரைகளை திட்டமிட்டு முறியடிப்பதற்கான வேலைகளை ரஷ்யா செய்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஹிலரியின் பரப்புரை மேலாளரின் மின்னஞ்சல்களும் அவரது கட்சி தலைமையகத்திற்கு வந்த தகவல்களும் திருடப்பட்டிருப்பதாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.