ஜோ பைடன்
ஜோ பைடன் ஃபேஸ்புக்
உலகம்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: அரபு நாடுகளின் தலைவர்களுடனான ஜோ பைடனின் சந்திப்பு ரத்து

PT WEB

காசா மருத்துவமனை மீதான குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சூழலில், அரபு நாடுகளின் தலைவர்களுடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைக்கோர அமெரிக்க அரசு திட்டமிட்டது. அதற்காக, ஜோர்டான் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன்
பங்கேற்க திட்டமிடப்பட்டது.

ஜோ பைடன்

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், ஜோர்டானில் அந்நாட்டு மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்துல் எல் சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்திக்க திட்டம் இருந்தது.

ஆனால், காசா மருத்துவமனை மீது நடந்த குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால், அரபு நாடுகளின் தலைவர்களுடனான ஜோ பைடனின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாதி தெரிவித்தார்.

எனினும், திட்டமிட்டபடி இஸ்ரேலுக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.