உலகம்

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவை தொடரும் கவுதமாலா

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து கவுதமாலா அதிபரும் தனது நாட்டின் தூதரகத்தை ‌இஸ்ரேலில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல் அவிவ் நகரி‌ல் ‌இருந்து ஜெருசலேத்துக்கு தூதரகத்தை மாற்றப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாமிய நாடுகள் இந்த அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தன. 

இதை‌யடுத்து அமெரிக்க அதிபரின் அறிவிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப் போவதாக கவுதமாலா‌ அதிபர் ஜிம்மி‌ மொராலெஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவிடம் பேசி முடிவெடுத்து விட்டதாகவும் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.