அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளிக்க இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பில் இருந்து வெளியேறுவதாகவும், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறியுள்ளது. ஜப்பானின் கடல் எல்லை பகுதியில் மட்டும் திமிங்கல் வேட்டைக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் அண்டார்டிகா கடல் பகுதியில், ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட முடியாது.
Read Also -> வங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வறுமையில் சிக்கிய ஜப்பான் மக்களுக்கு திமிங்கல வேட்டை முக்கிய பணியாக மாறியது. திமிங்கலத்தை உண்ணும் பழக்கமும் உருவானது. ஆனால் காலப்போக்கில் இது மறைந்தாலும் திமிங்கல வேட்டை தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால் அரிய வகை திமிங்கலங்கள் அழிந்து வருவதாக கூறி சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் ஜப்பான் தற்போது அந்த அமைப்பில் இருந்தே வெளியேறுகிறது.