வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை புதிய தடைகளை விதித்ததற்கு ஜப்பான் மிகுந்த வரவேற்பு தெரிவித்தள்ளது.
அண்மையில் ஜப்பான் வான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் அதிர்ச்சி அளித்தது. இதைத் தொடர்ந்து அந்நாட்டை பணிய வைக்க கூடுதல் தடைகளை விதிக்க வேண்டும் என ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. அதன்படி கடந்த 22 ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது புதிதாக கூடுதல் தடைகள் விதிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தால் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவிகித பெட்ரோலிய பொருட்கள் நிறுத்தப்படவுள்ளன. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியா, இந்தச் செயல் தங்கள் நாட்டின் மீது தொடுக்கும் மறைமுகமான போர் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐநா சபையின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் வரவேற்பு அளித்துள்ளது.