உலகம்

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவு!

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவு!

EllusamyKarthik

ஜப்பானில் 7.1 என்கிற ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலின் ஆழமான பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் தலைநகரான டோக்கியோவுக்கு அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து சுமார் 297 கிலோ மீட்டர் வடகிழக்கே உள்ள கடற் பகுதியில் இரவு 08.06 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.