உலகம்

மொரிசியஸ் கடலை பாழாக்கிய ஜப்பான் கப்பல் !

jagadeesh

சுற்றுலாவுக்கு பெயர்போன மொரிசியஸ் நாட்டுக் கடலில் விபத்துக்குள்ளாகி 1000 டன் எண்ணெய்யை சிந்திய ஜப்பான் கப்பல் இரண்டாக உடைந்தது.

மொரிசியஸ் நாடு சுற்றுலாத் தலத்துக்கு மிகவும் பெயர் பெற்றது. அந்நாட்டு கடல்களில் பவளப் பாறைகள் நிறைய இருக்கின்றன. அந்நாட்டு கடலில் ஏராளமாக கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. உலகின் மிகவும் தூய்மையான கடற்கரைகளில் மொரிசியஸ் நாட்டு கடலும் ஒன்று. இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற கப்பல் மொரிசியல் கடலில் ஜூலை 25 ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கியது. மொத்தமாக ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கசிந்த நிலையில். அந்தக் கப்பல் இப்போது இரண்டாக உடைந்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய்யால் கடலின் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளாதக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.