ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக குறைந்துள்ளதால் அந்நாட்டு அரசு கடும் கவலையில் மூழ்கியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் வெளிநாட்டு மக்கள் உட்பட ஜப்பானில் மொத்தம் 7 , 20 , 988 குழந்தைகளே பிறந்ததாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்பதையே இது காட்டுவதாக ஜப்பானிய அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார்.
திருமண வாழ்க்கை நடைமுறை ஜப்பானில் மெல்ல அழிந்து வருவதும் குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஜப்பானில் துடிப்பாக உழைக்க கூடிய இளம் தலைமுறையினர் எண்ணிக்கை வேகமாக குறையும் நிலையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது