உலகம்

உடல்நலக்குறைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா?

JustinDurai

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ஷின்சோ அபே  குடல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் தற்போது ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் நீண்டகால பிரதமராக பதவி வகித்துவரும் ஷின்சோ அபே, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தற்போது தக்கவைத்து இருப்பதற்கு முக்கியக் காரணமானவர். அவரது இடத்தை மற்றொரு பிரதமர் வந்து நிரப்புவது மிகக்கடினம்' என, ஜப்பானியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.