சுனாமி எச்சரிக்கை அளவுகள்
சுனாமி எச்சரிக்கை அளவுகள் புதிய தலைமுறை
உலகம்

”சுனாமிஅலை தாக்கும்; பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்”-டிவியில் தோன்றி ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் முன்னதாக 5.5 ரிக்டர் முதல் 7.2 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல்நீரானது ஊருக்குள் வர தொடங்கியுள்ளதால் மாகாண வாரியாக சுனாமி எச்சரிக்கை அளவுகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ”இஷிகாவா 5 மீட்டர், நிகடாவில் 3 மீட்டர், சாடோ தீவுவில் 3 மீட்டர் , யமகதாவில் 3 மீட்டர் , தோயாமா 3 மீட்டர் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தை அடுத்து ஜப்பானில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.

மேலும் ஜப்பானில் அனைத்து கடற்கரையோர பகுதிகளில் இருந்தும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தல்.

சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும் என அஞ்சப்படுவதால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.” என தொலைக்காட்சியில் தோன்றி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் தஞ்சமடைந்த ஜப்பான் மக்களுக்கு இந்த சுனாமியின் எச்சரிக்கை மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.