உலகம்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... உயிருக்கு ஆபத்தான நிலை?

நிவேதா ஜெகராஜா

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார்.

மார்பில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்த அபே, உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நரா என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த ஷின்சோ அபே திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அப்போது அவரது உடலில் ரத்தம் வழிந்தோடுவதை பார்த்ததாகவும் என்.ஹெச்.கே.என்ற செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நபரை குறிப்பிட்டு, அவர்தான் அபேவை சுட்டவர் என்று புகைப்படங்களும் வெளிவருகின்றன.

ஷின்சோ அபே சுடப்பட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. பொது இடத்தில் அவர் சுடப்படுவது அமர்ந்திருக்கும் அந்த வீடியோ காட்சி பார்ப்பவரை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

ஷின்சோ அபேவின் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையான அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.