நயாகரா நீர்வீழ்ச்சி - சுனிதா வில்லியம்ஸ் புதிய தலைமுறை
உலகம்

Top World News | உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி முதல் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சாதனை வரை!

உலகளவில் இன்று நடந்துவரும் சில முக்கியமான நிகழ்வுகளை அறியலாம்...

PT WEB
  • அமெரிக்கா வாசிங்டன் நகரில் பயணிகள் விமானம் - ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழப்பு. திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே விபத்துக்கு காரணம் என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு.

  • போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் இருந்த மேலும் 8 பிணைக் கைதிகள் விடுவிப்பு. பாலஸ்தீன ஆதரவுக்குழு முன்னாள் தலைவர் ஜகாரியா உட்பட 110 பேரை விடுவித்தது இஸ்ரேல் அரசு.

  • அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி.... பனி கட்டிகளால் சூழப்பட்டுள்ள நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலாப் பயணிகள்.

உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி
  • மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுக்கும் அமேசான் நிறுவனம். தொலைதொடர்புத்துறையில் குறிப்பிட்ட பணியில் இருக்கும் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு.

  • மீண்டும் ஸ்பேஸ் வாக் செய்து பணி மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ். நீண்ட நேரம் விண்ணில் மிதந்த பெண் என்ற சாதனையை படைத்தார்.

  • அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குநராக ட்ரம்பால் நியமிக்கப்பட்ட காஷ் பட்டேல், செனட்டர் சபை விசாரணையின் முன்பு ஜெய் ஸ்ரீகிருஷ்ணா என கூறிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமை ரத்து சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

  • மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
  • உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ரஷ்யா ஏவிய 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • ஜப்பானில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட 74 வயது முதியவரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் குழாய் உடைந்து தோன்றிய பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு

  • சந்திர புத்தாண்டு பிறப்பையொட்டி ஹாங்காங் நகரில் நடந்த வாணவேடிக்கை நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

  • சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் தொடக்கவிழா ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.