உலகம்

இந்தோனேசியா: மசூதியில் ஏற்பட்ட தீவிபத்து - இடிந்து விழுந்த ராட்சத குவிமாடம்! #ViralVideo

Sinekadhara

இந்தோனேசியாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தினுடைய பெரிய மசூதியில் தீப்பிடித்ததில் ராட்சத குவிமாடம் நொறுங்கி விழுந்தது.

ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்த காட்சி புதன்கிழமை சமூக ஊடகங்களில் பரவி வைரலானதை அடுத்து, அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிரிழப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியதாக கல்ஃப் டுடே தெரிவித்துள்ளது.

ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தில் தற்போது புதுபிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் அங்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் மசூதியின் ராட்சத குவிமாடம் இடிந்து நொறுங்கியது. உடனடியாக அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. குவிமாடம் நொறுங்கியதற்கு முன்பே கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வருவது வெளியான அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல் அக்டோபர் 2002 அன்று புதுபித்தல் பணி நடந்தபோது இதேபோல் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என கல்ஃப் டுடே செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.