உலகம்

விடுதலைப் புலிகள் போன்ற தோற்றத்தில் ஊழியர்களுக்கு சீருடை - யாழ்ப்பாண மேயர் கைது

விடுதலைப் புலிகள் போன்ற தோற்றத்தில் ஊழியர்களுக்கு சீருடை - யாழ்ப்பாண மேயர் கைது

EllusamyKarthik

யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். நகராட்சி ஊழியர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை போன்ற தோற்றத்தில் சீருடை வடிவமைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிப்பதற்காக தனிப்படை ஒன்றை உருவாக்கி இருந்தார் மேயர் விஸ்வலிங்கம். இந்நிலையில் அவர்களை எளிதில் அடையாளம் காணும் நோக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை போன்ற தோற்றம் உடைய சீருடையை அவர் வடிவமைத்ததாக தெரிகிறது.

இந்த விவாகரம் சிங்கள மக்களிடையே சர்ச்சையாக வெடித்தது. தொடர்ந்து அவரிடம் உள்ளூர் போலீசார் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனை ஏற்று அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தை ஏற்காத போலீசார் அவரை தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.