”டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதற்கு ட்விட்டர் சமூகவலைதளம் பெரிய அளவில் பங்குவகித்தது என்பது உண்மையென்றால் அதற்காக நான் வருந்துகிறேன்” என ட்விட்டர் தளத்தின் இணை நிறுவனர் இவான் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரானதில் ட்விட்டரின் பங்கு மிக முக்கியமானது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்ததைக் குறித்த கேள்விக்கு ”தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த இவான் வில்லியம்ஸ், “ட்விட்டர் இல்லாவிட்டால் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆகியிருக்கமாட்டார் என்பது உண்மையென்றால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
”மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பேசிப் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு தளம் இருந்தால் உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என நான் நினைத்தது தவறாக இருக்குமோ” என தோன்றுவதாகக் கூறினார்.