உலகம்

இத்தாலியில் முதல் பெண் பிரதமராக பதவியேற்கிறார் ஜியார்ஜியா மெலானி?!

நிவேதா ஜெகராஜா

இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜியார்ஜியா மெலானி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதன் நீட்சியாக இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார். அதைத்தொடர்ந்து, இத்தாலிக்கு புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அதில் சுமார் 64% வாக்குகள் பதிவாகின. அவற்றின் முடிவில் ஜியார்ஜியா மெலோனி தலைமையிலான தேசிய சகோதரத்துவ கட்சி 26% வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இக்கட்சி தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இத்தாலியில் தீவிர வலதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைவது இதுவே முதல் முறையாகும்.