உலகம்

“இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும்” - கிரேட்டா தன்பெர்க்

“இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும்” - கிரேட்டா தன்பெர்க்

EllusamyKarthik

இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ உலகின் ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்றிணைய வேண்டும் என கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் “இந்தியாவின் அண்மைய நிலையை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே. உலக சமுதாயம் ஒன்றுபட்டு இந்தியாவிற்கு தேவைப்படும் உதவியை கொடுக்க முன் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

இந்தியா குறித்து தன்பர்க் தனது மனதில் பட்ட கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துபவர். விவசாயிகள் போராட்டம் குறித்தும் தனது கருத்தை அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.