இஸ்ரேல் நிறுவனம்
இஸ்ரேல் நிறுவனம்  file image
உலகம்

"ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை" - போருக்கு மத்தியில் இஸ்ரேலின் அதிரடி முடிவு - பின்னணி இதுதான்!

PT WEB

ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் கடந்த மாதம் 7 தேதி தொடங்கி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் இருதரப்பிலும் நாளுக்குநாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த போரில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா. சபை மற்றும் உலகநாடுகளும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்தது.

இந்தநிலையில் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இஸ்ரேலில் பணியாற்றி வந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமத்தை இஸ்ரேல் அரசு ரத்து செய்தது. அங்கு பணியாற்றி வந்த பாலஸ்தீனிய மக்களும் தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

இதனையடுத்து இஸ்ரேல் அரசு வேலை வாய்ப்பு கொள்கைகளில் புதிய திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த அதிரடி திருத்தக் கொள்ளை மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பணியமர்த்தப்படும் இந்தியர்கள் அனைவரும் கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. ஐ.நா.சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாகக் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்திய ராணுவப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. தொடர்ந்து இந்தியா இஸ்ரேலுடன் நட்புணர்வு கொண்டு வருவதால் இஸ்ரேல்- இந்தியா இடையேயான நட்பு வலுப்பெறும் நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.