israel war
israel war pt desk
உலகம்

காஸா நகரை சுற்றி வளைத்து தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

webteam

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காஸாவில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Gaza | IsraelPalestineConflict | Israel | Palestine

இச்சூழலில், நேற்று மட்டும் இஸ்ரேல் வான் படையினர் முகாம்களாக செயல்படும் 4 பள்ளிகளில் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், 20 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏற்கனவே உணவு, தண்ணீர் இன்றி காஸா மக்கள் தவிப்பதாகவும், முகாம்களை நோக்கியே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கும் ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஸாவின் அனைத்து பகுதிகளையும் முழுவதும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஹமாஸ் படையினரின் பதுங்கு குழியாக உள்ள சுரங்கங்களிலும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.