இஸ்ரேலுடனான போரில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு 423 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுடனான போரில் லெபனானைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், சொத்துக்களை இழந்தனர். அவர்களது நிலையை அறிந்து ஹிஸ்புல்லா அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளதாக அதன் தலைவர் நசீம் குவாசிம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், சுமார் இரண்டரை லட்சம் குடும்பத்தினருக்கு தலா 300 முதல் 400 அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதேப் போன்று போரில் சேதமடைந்த பள்ளிகள், குடியிருப்புகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என நசீம் குவாசிம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதியுதவி செய்த ஈரானுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.