Israel Gaza war
Israel Gaza war File image
உலகம்

லெபனானின் எல்லை பகுதியில் வசிக்கும் 20,000 க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு!

ஜெனிட்டா ரோஸ்லின்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான பேரானது 14 நாட்களை எட்டியுள்ள நிலையில் தற்போது லெபனானின் வடக்கு எல்லையில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான கிரியாத் ஷ்மோனாவில் வசிக்கும் 20,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளை அங்கிருந்து வெளியேற்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தெற்கு காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் தற்போது அங்குள்ள அரசு மானியம் பெறும் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இவர்களும் வைக்கபடுவார்கள் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Israel Gaza war

காஸாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களை சூரையாடியுள்ளது இஸ்ரேல். இப்போரில் அப்பாவி குழந்தைகளும் பெண்களுமே பெரிதும் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதன் விளைவாக ஹமாஸ் பிரிவை சேர்ந்த கடற்படை மூத்த கமாண்டர் ஷாலாபி கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேஸ் ஏற்கெனவே தன் எல்லையில் உள்ல சில பகுதிகளை மூடிய இராணுவ மண்டலங்களாக அறிவித்திருந்தது. எனவே அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களை வெளியேறும்படியும் கட்டாயப்படுத்தியது.

முன்னதாக இஸ்ரேலியப் படைகளும் லெபனானின் ஈரான் ஆதரவு குழுவும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் நடத்திய பலத்த துப்பாக்கிச்சூட்டில், பத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலால் பலியாகி உள்ளார் என்று லெபனான் இராணுவம் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் இதுகுறித்து கூறுகையில், “பொதுமக்கள் கொல்லப்படுவது, நாட்டின் மீதான இத்தாக்குதலுக்கள் ஆகியவற்றுக்கு நிச்சயம் தண்டனையும் பதிலும் கொடுக்காமல் விடமாட்டோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தனர்.

Israel Gaza war

மேலும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு தொடர்பான கமிட்டி இது குறித்து கூறுகையில், ”இந்த போர் தொடங்கிய நேரத்தில் இருந்தே 20 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொல்லப்பட்ட, காயமடைந்த, காணாமல் போனவர்களாக அறியப்பட்ட பத்திரிகையாளர்கள் பற்றிய விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தது.

சமீபத்தில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி இஸ்சம் அப்துல்லா என்னும் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோலானிக்கு சென்று வீரர்களை போருக்கு மேலும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

Israel Gaza war

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவா கோலான்ட் காஸா எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்படும். 2வது கட்டமாக காஸாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தப்படும். போரில் வெற்றி பெற்ற பிறகு 3 வது கட்டமாக காஸாவில் புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.