பங்கர் பஸ்டர் குண்டு என்றால் என்ன? pt
உலகம்

இதுவரை போரை பார்க்காத அதிபயங்கர குண்டு.. இஸ்ரேலுக்காக களமிறக்கும் அமெரிக்கா! அது என்ன பங்கர் பஸ்டர்?

உலகின் சக்தி வாய்ந்த குண்டாக பங்கர் பஸ்டர் குண்டு பார்க்கப்படுகிறது. அணுகுண்டுக்கு அடுத்தபடியாக வலிமை வாய்ந்ததாக கருதப்படும் இவ்வகை குண்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம்..

PT WEB

ஈரானில் உள்ள அணுஆயுத ஆலையை அழிக்க அமெரிக்காவிடம் இருந்து அதிக திறன் வாய்ந்த பங்கர் பஸ்டர் வகை குண்டுகளை இஸ்ரேல் கேட்டுள்ளதாக தெரிகிறது.

பங்கர் பஸ்டர் குண்டு என்றால் என்ன?

ஈரானில் ஃபர்தோ என்ற பகுதியில் மலையை குடைந்து அணுஆயுத தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டும் ஆலை அமைந்துள்ளது. இதை இஸ்ரேலிடம் உள்ள வழக்கமாக குண்டுகளை கொண்டு அழிக்க முடியாது.

எனவே மலையை குடைந்து சென்று அழிவை ஏற்படுத்தக்கூடிய GBU - 57 பங்கர் பஸ்டர் என்ற வகை குண்டுகளை அமெரிக்காவிடம் இஸ்ரேல் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30,000 பவுண்டு எடை கொண்ட இந்த குண்டு 20 அடி நீளம் கொண்டதாகும். இது பூமியில் 200 அடி ஆழம் வரை ஊடுருவி செல்லக்கூடியதாகும். 60 அடி ஆழ காங்க்ரீட்டையும் ஊடுருவிச்சென்று தாக்கும் சக்தி இந்த பங்கர் பஸ்டர்களுக்கு உண்டு.

பல நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை குண்டு வீச்சிலிருந்து தப்பும் வகையில் பூமிக்கு அடியிலேயே அமைத்துள்ளன.

இதற்கு பதிலடி தரும் வகையில் பங்கர் பஸ்டர்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அதே நேரம் இவ்வளவு எடை மிகுந்த குண்டை தூக்கிச்செல்ல சக்தி வாய்ந்த விமானம் தேவை. அதுபோன்ற B2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர் விமானத்தையும் அமெரிக்கா வைத்துள்ளது. இந்த விமானமும் குண்டும் இதுவரை பரிசோதித்து மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. ஒரு முறை கூட போரில் நேரடியாக சோதித்துப்பார்க்கப்படவில்லை.

இம்முறை அதை இஸ்ரேல் மூலம் அமெரிக்கா நிஜமான போரில் சோதித்து பார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.