iran x page
உலகம்

இஸ்ரேலை அழிக்க ஈரானின் மாஸ்டர் பிளான்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!

20 ஆயிரம் ஏவுகணைகள், அணுகுண்டுகளுடன் உலகின் மிக வலிமையான பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

இஸ்ரேலை அழிக்க ஈரான் மிகப்பெரிய அளவில் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இஸ்ரேலிய அதிகாரி ஒருவரே கூறியுள்ளார். இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓரன் மர்மர்ஸ்டெய்ன் கூறியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஈரானின் BALLISTIC ஏவுகணைத் திட்டங்கள் அணுகுண்டுகள் அளவுக்கு பேரழிவு ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றும் அந்நாடு மீது தாங்கள் போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் என்றும் மர்மர்ஸ்டெய்ன் கூறியுள்ளார். ஈரானியர்கள் தயாரிக்கும் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் ஒரு டன் வெடிமருந்துடன் லண்டன் வரை சென்று தாக்கும் அளவுக்கு வலிமையானவை என்றும் இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான்

ஏவுகணை தயாரிப்பை ஒரு தொழில் போலவே ஈரான் மாற்றிவிட்டதாகவும் BALLISTIC ஏவுகணை தயாரிப்பில் உலகில் நம்பர் ஒன் நாடு என்ற இடத்தை அது நெருங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் தற்போது இருந்தாலும் அதை 20 ஆயிரமாக உயர்த்தும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார். ஈரானிடம் 9 அணுகுண்டுகள் தயாரிக்கும் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளதாகவும் மர்மர்ஸ்டெய்ன் கூறியுள்ளார். அணுகுண்டுகள், ஏவுகணைகள், படைபலங்கள் கொண்டு உள்ளே ஊடுருவி தாக்குதல் ஆகிய 3 முறைகளில் இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டம் தீட்டியுள்ளதாகவும் மர்மர்ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

மறுபுறம், ஈரான் ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க, அமெரிக்கா 10 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா THAAD ஏவுகணைகள் மூலம் இடைமறித்தது.

டொனால்டு ட்ரம்ப்

இதற்காக அமெரிக்கா, தோராயமாக 60 முதல் 80 ஏவுகணைகளை ஏவியிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. ஒரு THAAD ஏவுகணையை தயாரிக்க, இந்திய மதிப்பில் 125 கோடி செலவாகும் என கூறப்படுகிறது. அதன்படி, இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா, சுமார் 10 ஆயிரத்து 136 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அமெரிக்கா தன்னிடமிருந்த மொத்த THAAD ஏவுகணைகளில், 20 சதவீதத்தை பயன்படுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.