Benjamin Netanyahu Cancer Israel PM
உலகம்

நெதன்யாகுவுக்கு CANCER.. அதிகாரபூர்வமாக வெளியான அறிக்கை.. உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு CANCER கட்டி இருப்பதாகவும், இதுகுறித்து அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட தகவலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Praveen Joshva L

வலதுசாரி கொள்கை உடைய லிகுட் கட்சியின் தலைவராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்டகாலம் பிரதமராகப் பணியாற்றி வரும் நபராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட காஸா மற்றும் ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்குச் சிறிய அளவிலான cancer இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குபுரோஸ்டேட் சுரப்பியில் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் மிகச்சிறிய, சந்தேகத்திற்குரிய கட்டி கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அது சிறிய அளவிலான புற்றுநோய் கட்டி என்று கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டியை அகற்ற நெதன்யாகுவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த சிகிச்சை வெற்றிபெற்று அந்தக் கட்டி தற்போது முழுமையாக மறைந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த கேன்சர் பாதிப்பு உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனினும் அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டியை அகற்ற நெதன்யாகுவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்தச் சிகிச்சை வெற்றிபெற்று அந்தக் கட்டி தற்போது முழுமையாக மறைந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த கேன்சர் பாதிப்பு உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனினும் அவருக்குத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், தனது மருத்துவ நிலையை பிரசாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள ஈரானுக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்ப்பதற்காக, அறிக்கை இரண்டு மாதங்களுக்குத் தாமதமாக வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதோடு, புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு, நான் நல்ல ஆரோக்கியத்துடனும் சிறந்த உடல் நிலையிலும் இருக்கிறேன் என நெதன்யாகு கூறியுள்ளார்.