உலகம்

இஸ்ரேல் பிரதமர் தம்பதி சகிதமாய் மோடிக்கு வைத்தார் விருந்து

இஸ்ரேல் பிரதமர் தம்பதி சகிதமாய் மோடிக்கு வைத்தார் விருந்து

webteam

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மனைவியுடன் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார். 

அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்நாள் நிறைவில் ஜெருசலேமின் பெய்ட் ஆஜியோன் (Beit Aghion) பகுதியில் உள்ள வீட்டில் பெஞ்சமின் நெதன்யாகு, மோடிக்கு சிறப்பு விருந்தளித்தார். இந்த விருந்தில் மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் அவரது மனைவியுடன் கலந்துகொண்டார். அதிகாலை 2.30 (இஸ்ரேல் நேரப்படி) வரை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விருந்து நடந்தது. விருந்தின் முடிவில் ஜெருசலேம் நகரை மீட்பதற்கான போரில் பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஜெனரல் ஆலன்பை தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை பிரதமர் மோடிக்கு, பெஞ்சமின் நெதன்யாகு பரிசளித்தார். இஸ்ரேலுக்கு சென்றுள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பெற்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.