உலகம்

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர், இலங்கை அதிபர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர், இலங்கை அதிபர் வாழ்த்து

webteam

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து களை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி  கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் தனது வாழ்த்துக்களை மோடிக்குத் தெரிவித்துள்ளார். அவர், இந்தியா-இஸ்ரேல் நட்புறவை தொடர்ந்து வலுபடுத்துவோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.