israel war
israel war pt desk
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

webteam

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ஹமாஸ் படையினரும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் ஹமாஸின் ராணுவ நிலைகளை தகர்ப்பது, காஸாவில் 16 ஆண்டு கால ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகிய இலக்கில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

gaza

4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தின் படி, ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகள் 67 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் சிறையில் இருந்த 117 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, காஸாவில் மக்களுக்குத் தேவையான மருந்து, உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்கள் அதிகளவு வழங்கப்படும் என ஐ.நா கருதுகிறது. நாளொன்றுக்கு 160 முதல் 200 டிரக்குகளில் உணவு, மருந்துப் பொருட்கள் காஸாவுக்கு அனுப்பப்படுகின்றன.