காசாவில் நிவாரண உதவிகளை பெற பாலஸ்தீனியர்கள் அலைமோதும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கிறது.
இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்த போர் முடிவுக்கு வந்தநிலையில், காசாவில் நிவாரண உதவிகளை பெற பாலஸ்தீனியர்கள் அலைமோதும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது. காசாவில் போர்நிறுத்தம் அமலான பிறகு உலக நாடுகள்
அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனினும், போர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அளவு நிவாரணம் சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக நிவாரணப் பொருட்களுடன் செல்லும்
வாகனங்களை துரத்திச் சென்று அதனை எடுத்து வருகின்றனர்.
ஒருசிலர் வாகனங்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி பொருட்களை திருடும் செயல்களில் ஈடுபடுவதாக தன்னார்வலக் குழுவினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, நிவாரணப் பொருட்கள் காசாவிற்குள் எளிதாக செல்லும் வகையில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.