ஹமாஸ் அமைப்பின் தலைவரை கொன்றது தாங்கள்தான் என இஸ்ரேல் முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஹவுத்தி கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியெ உள்ளிட்டவர்களை தாங்கள் தீர்த்துக்கட்டியுள்ளதாகவும் அதே போன்று ஹவுத்தி தலைவர்களையும் அழித்து ஒழிப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தற்காப்பு தொழில்நுட்பங்களை முறியடித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிரியாவில் ஆட்சியை கவிழ்த்துள்ளதாகவும் இந்த வரிசையில் கடைசியாக ஹவுத்தி கிளர்ச்சிக்குழுவினர் உள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் கிளர்ச்சிக்குழு தலைவர் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்ட நிலையில் அதை தற்போது இஸ்ரேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளது