இஸ்ரேல் நாட்டின் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுமி ஒருவர் பால்கனியில் இருந்து குதித்து உயிர் தப்பிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பீர்ஷீபா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. எட்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் சிக்கிக் கொண்டார். புகை பரவியதால் அவரால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் பின்பகுதியில் இருந்த பால்கனிக்கு வந்த அவர் அங்கிருந்து கீழ் தளத்துக்கு துணிச்சலுடன் குதித்தார். கீழ் தளத்தில் இருந்த தீயணைப்புப் படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். 10 வயது சிறுமியின் துணிச்சலான செயல் காண்போரை ஆச்சரியப்படுத்தியது. தீ விபத்து காரணமாக சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.