tehran  web
உலகம்

ஈரான் | ‘காந்தி’ மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்.. நோயாளிகள் வெளியேற்றம்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ கூட்டு நடவடிக்கையின் இரண்டாவது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

PT WEB

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்ட தெரு மற்றும் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில் - இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் மருத்துவமனை கடும் சேதமடைந்ததால் நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு தெருவுக்கும் அந்தத் தெருவில் உள்ள மருத்துவமனை மற்றும் உணவகத்தை உள்ளடக்கிய வளாகத்திற்கும் மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனையில் - இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், இந்த வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்தது. நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தரைத்தளத்தில் சக்கர நாற்காலிகளுக்கு அருகே இடிபாடுகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.