சிரியாவின் ரக்கா நகரில் அமெரிக்க படைகள் முன்னேறி வரும் நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிரியாவின் ரக்கா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்க ஆதரவுப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால், படைகளின் தாக்குதல் வேகம் குறைக்கப்பட்டிருக்கிறது.
நகர் முழுவதும் சுரங்கங்களைத் தோண்டி, தீவிரவாதிகள் அவற்றில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குர்து இனத்தவர் தலைமையிலான ஆயுதக் குழுவினர் தரையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க விமானங்கள் அவர்களுக்கு ஆதரவாக குண்டு வீசி வருகின்றன.