உலகம்

இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறையா..? ஆங் சான் சூச்சி மறுப்பு

இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறையா..? ஆங் சான் சூச்சி மறுப்பு

Rasus

மியான்மர் நாட்டின் ராகினே பிராந்தியத்தில் இஸ்லாமியர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூச்சி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகினே பிராந்தியத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பணியில் மியான்மர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துருக்கி அதிபர் தயீப் எர்டோகனுடன் தொலைபேசியில் உரையாடிபோது சூச்சி இவ்வாறு தெரிவித்ததாக அவரது அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், தவறான சித்திரிக்கப்படும் போலியான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் சூச்சி குறிப்பிட்டிருக்கிறார். 

வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் திரும்பி வரமுடியாதபடி, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், சூச்சி வெளிப்படையாகக் தெரிவித்திருக்கும் முதல் கருத்து இதுவாகும்.