DATA CENTERS  AI
உலகம்

தண்ணீரை உறிஞ்சுகிறதா AI ? உண்மையைப் போட்டுடைத்த புதிய ஆய்வு!

AI-யின் அதிகரித்து வரும் தண்ணீர் பயன்பாடு – டேட்டா சென்டர்களின் நீர் நுகர்வு – பாதாம் பால், கோல்ஃப் விளையாட்டுடன் ஒப்பிட்டு வெளியான ஆய்வு தகவல்கள்!

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

ChatGPT போன்ற AI செயலிகள் பூமியின் தண்ணீர் வளத்தை வேகமாக உறிஞ்சி வருவதாக உலகம் முழுவதும் விமர்சனம் இருந்து வருகிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது ஒரு ஆச்சரியமான ஆய்வு வெளியாகியுள்ளது. உண்மையில் AI அதிக தண்ணீரைச் செலவழிக்கிறதா, எவ்வளவு தண்ணீர் செலவழிக்கப்படுகிறது? போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

AI

உலகம் முழுவதும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால், அதற்கேற்பப் பிரம்மாண்டமான புதிய டேட்டா சென்டர்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்வர்களை இயக்குவதற்கு அதிக அளவிலான மின்சாரமும், அவற்றைக் குளிர்விப்பதற்குத் தண்ணீரும் தேவைப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ALMOND MILK AND GIOLF GAME

இந்தச் சூழலில், அமெரிக்காவைச் சேர்ந்த Enverus Intelligence Research என்ற ஆய்வு நிறுவனம், AI-யின் தண்ணீர் பயன்பாட்டையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் ஒப்பிட்டு ஒரு புதிய கோணத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதில், டேட்டா சென்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரை விட, பாதாம் பால் மற்றும் கோல்ஃப் விளையாட்டிற்கு அதிக அளவிலான தண்ணீர் செலவழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள, ஒரே அளவிலான பணத்தைச் செலவழிக்கும்போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. அதன்படி, 25 டாலருக்கு நாம் AI பயன்படுத்தினால் வெறும் 7. 2 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். ஆனால், அதே 25 டாலர் மதிப்புள்ள பாதாம் பாலை உற்பத்தி செய்ய 1, 166 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. அதேபோல, 25 டாலர் கட்டணத்தில் கோல்ஃப் விளையாடுவதற்கு அந்த மைதானத்தைப் பராமரிக்க 2, 570 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. எனவே, AI-ஐ விட இந்த அன்றாடப் பயன்பாடுகள்தான் அதிக அளவு தண்ணீரைச் செலவழிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

WATER USAGE

அதுமட்டுமல்லாமல், நிலப்பரப்பு அடிப்படையில் கணக்கிட்டாலும் ஒரு நவீன டேட்டா சென்டர் வளாகம் ஒரு ஏக்கருக்கு மாதத்திற்கு சுமார் 1, 21, 512 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இது நெல் மற்றும் பாதாம் சாகுபடி போன்ற விவசாயப் பயிர்களின் பயன்பாடு தண்ணீர் விடக் குறைவாகவும், ஒரு அமெரிக்க கோல்ஃப் மைதானத்தின் தண்ணீர் பயன்பாட்டிற்கு நெருக்கமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வெளிவந்துள்ள மற்றொரு முக்கியத் தகவல், AI பயன்படுத்தும் மொத்தத் தண்ணீரில் சுமார் 90 சதவீதம் டேட்டா சென்டர்களில் நேரடியாகச் செலவழிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த சர்வர்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையங்களில்தான் பெரும்பகுதி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

WATER USAGE OF AI DATA CENTERS

இது குறித்து Enverus நிறுவனத்தின் ஆற்றல் மாற்ற ஆராய்ச்சி இயக்குநர் ரியான் லூதர் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீட்டைப் பகிர்ந்துள்ளார். ஒருவர் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்றால், AI Chatbot-களைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, வாரத்திற்கு ஒரு முறை பாதாம் பால் காபியைத் தவிர்த்தால், 100 டாலர் மதிப்பிலான AI பயன்பாட்டிற்குத் தேவைப்படும் தண்ணீரை விட அதிகத் தண்ணீரைச் சேமிக்க முடியும். அதேபோல, ஒரு முறை கோல்ஃப் விளையாடுவதைத் தவிர்ப்பதன் மூலம், 16,000 டாலர் மதிப்புள்ள AI பயன்பாட்டிற்குச் சமமான தண்ணீரைச் சேமிக்க முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது.