மொஜ்தபா காமேனி Pt web
உலகம்

மொஜ்தபா நிலை என்ன? இருப்பிடத்தைக் கண்டுபிடித்த உளவுத் துறை.. ஈரானுக்குச் சிக்கலா?

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது.

Prakash J

ஈரானின் தற்போதைய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமெனி, தற்போது கோம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது. இருதரப்பும் மாறிமாறித் தாக்கி வருவதால், அதற்கு இப்போது முடிவு கிடைக்காது என்றே பலரும் நம்புகின்றனர். இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரானின் அணுமின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாததும், அவர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டதும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

அலி கமேனி

காரணம், அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், அதற்குப் பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும், மொஜ்தபா எங்கே இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார் என்பதிலுமே இன்னும் மர்மம் விலகாமல் உள்ளது. இந்த நிலையில்தான் மொஜ்தபா கமெனி, தற்போது கோம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், இதனால் ஆட்சியின் எந்தவொரு முடிவெடுக்கும் செயல்முறையிலும் அவரால் ஈடுபட முடியவில்லை என அந்த செய்தி கட்டுரை குறிப்பிடுகிறது.

மொஜ்தபா காமேனி

மேலும், நாட்டின் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக, உச்ச தலைவரின் இருப்பிடத்தையும் அந்தக் குறிப்பாணை வெளிப்படுத்தியது. அவர் தற்போது தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் உள்ள மத்திய நகரில் வசித்து வருவதாகவும், மேலும் ஷியா இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி அவர் புனிதமானவராகக் கருதப்படுகி்றார் எனவும் அது தெரிவித்துள்ளது. அந்தக் குறிப்பாணை குறிப்பிடுவதுபோல, அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் உச்ச தலைவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளன. இது, மேலும் ஈரானுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.