ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு பிரதமர் அபாதி கூறியுள்ளார்.
ஈராக் நாட்டின் மொசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் 39 பேரை ஐ.எஸ் பயங்கரவாதிகள், 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.