Iran Reuters
உலகம்

சுக்கு நூறாக நொறுக்கிய ஈரான்! USA-ன் கடற்படை சொத்து காலி!

அமெரிக்க கடற்படையின் முக்கிய சொத்தை குறி வைத்து அழித்துள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில், தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று உள்ளது. இதனை பயன்படுத்திதான், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டத்தை ஈரான் கண்காணித்து வந்தது. மேலும், தங்களுக்கு தேவையான தகவல் தொடர்பு இணைப்புகளை பரிமாறவும் இந்த தளம் பயன்பட்டு வந்தது. ஆனால், வியாழன் அன்று, அமெரிக்காவின் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி, அந்த கோபுரத்தை சேதப்படுத்தின. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்கா கடற்படையின் முக்கிய சொத்தாக உள்ள அம்சத்தை, ஈரான் துவம்சம் செய்துள்ளது.

Trump

அதாவது, பஹ்ரைன் நாடு என்பது அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் தலைமையகமாக உள்ளது. எதிரி நாடுகள் தொடுக்கக் கூடிய ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை எல்லைக்குள் நுழைவதை பல மீட்டர்களுக்கு முன்பே தடுத்து நிறுத்துவதற்கு, எச்சரிக்கை ரேடார் என்ற அமைப்பு இங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபத்து நெருங்குவதை முன்கூட்டியே கணித்துத் தெரிவிப்பதால், வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக செயல்படுத்த இது மதிப்புமிக்க நேரத்தை வழங்குகிறது.

இதுமட்டுமின்றி, எதிரியின் ஏவுகணை அல்லது விமானம் எங்கு பறக்கிறது, எங்கு நோக்கிச் செல்கிறது, அதன் வேகம் என்ன போன்ற துல்லியமான கணக்கீடுகளைத் தொடர்ந்து கண்காணித்து ராணுவக் கட்டுப்பாட்டு அறைக்குத் இது அனுப்பும். இப்படி பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இவ்வளவு முக்கியமான ஒரு பாதுகாப்பு அம்சத்தை, குறி வைத்து தாக்கி அழித்திருப்பதாக, ஈரானின் புட்சிகர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வான்வழி ஆக்கிரமிப்பு மற்றும் எண்ணெய் கடத்தல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது என்றும், IRGC தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த தாக்குதலின் மூலம் அமெரிக்கா இடையே நடந்து வரும் போர் மீதான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், ஏற்கனவே இடைக்கால தேர்தலில் தோல்வி அடைந்து நிற்கும் அதிபர் டிரம்புக்கு, இது மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது.