ஹோர்முஸ் நீரிணை x page
உலகம்

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி| ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு! என்ன நடக்கும்?

ஈரானில் உள்ள மூன்று அணு சக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

PT WEB

ஈரானில் உள்ள மூன்று அணு சக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த இறுதி முடிவு ஈரானின் தேசிய உச்ச பாதுகாப்பு குழுவால் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கிறது. உலகின் மொத்த கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பங்கும், திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கும் இந்த நீரிணை வழியாகவே நடக்கிறது. இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த பாதை வழியாகவே நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரீணை தடைபட்டால் உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

hormuz map

விலைகள் கடுமையாக உயரும். இந்தியா தனது 80 விழுக்காடு கச்சா எண்ணெய்யை இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது. வேறு சில நாடுகளிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பற்றாக்குறை ஏற்படாது; ஆனால் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணை அடைக்கப்படுவதால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.