இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கூறி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஈரானைச் சேர்ந்த 30 அணு விஞ்ஞானிகள் குறித்த ரகசிய தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக அகமதுரேசா ஜலாலி என்பவர் கைது செய்யப்பட்டார். ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவரான இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஈரான் சென்றிருந்தபோது உளவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈரான் நீதின்றம் அவர் மீதான குற்றங்களை உறுதி செய்து மரண தண்டனை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தள்ள ஜலாலியின் மனைவி தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை ஆணையமும் ஈரானின் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.