ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான் web
உலகம்

மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணை.. "அமெரிக்கா தலையீட்டை நிறுத்தனும்.." ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

PT WEB

அமெரிக்கா மேற்கு ஆசிய தலையீட்டை நிறுத்தும் வரை ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் IRGC அறிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ரத்து, மூன்று நாள் அமெரிக்க வான்தாக்குதல், கமேனி படுகொலை, டிரம்ப் மீது கொலை மிரட்டல், ஆயிரக்கணக்கான ஏவுகணை எச்சரிக்கை ஆகியவை பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயரக்கூடும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்கா தனது "தலையீட்டை" நிறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா தலையீட்டை நிறுத்தும் வரை கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்படும் என ஈரான் கூறியுள்ளது.

Iran oil Production

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் அணையை மூடுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மூன்று நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

இதனிடையே, ஈரானின் உச்ச தலைவராக இருந்து கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்லுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மக்கள் பேரணி சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தன்னை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ஈரானை நோக்கி ஆயிரம் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபரான தன்னை படுகொலை செய்யவோ அல்லது படுகொலை செய்ய முயற்சித்தாலோ அந்நாட்டை அழிப்பதற்கான உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளதாகவும், ஓராண்டு காலத்திற்குள் ஈரானை முற்றிலுமாக அழித்தொழிக்கத் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி - அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மூன்று நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது "தலையீட்டை" நிறுத்தும் வரை, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகள் உயர்ந்துள்ளதை அடுத்து அத்யாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது. தற்போது ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் நிலை உருவாகியுள்ளது.